Saturday, May 11, 2019

ஸ்ரீ ராம நாம ஜெப மஹிமை 3 -- ஸ்ரீ ராமரின் சிறப்புகள்

ஸ்ரீ ராமரின் சிறப்புகள்

பால காண்டத்தில் ஸ்ரீ நாரத முனிவர் ஸ்ரீ ராமரின் நற்குணங்களை முனி சிரேஷ்டரான வால்மீகிக்கு விவரிக்கிறார்.
‘இக்ஷ்வாகு  வம்சத்தில் பிறந்துää இப்பொழுது அயோத்யையை ஆண்டு வருகிற ஸ்ரீ ராமர் என்கிற அரசர் நற்குணங்கள் அனைத்தையும் பெற்றவர்……... ..
தன்னை நம்பியவர்களுக்கு தன்னையே அடிமையாக்கிக்  கொள்ளும்  குணவான்ää 
....எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாக திகழும் அந்த அயோத்தி மன்னர் ராமர் கம்பீரத்தில் கடல் தைரியத்தில் இமயமலைää வீரத்தில் விஷ்ணுää இன்பம் அளிக்கும் தோற்றத்தில் சந்திரன்ää கோபத்தில் பிரளயாக்னிää பொறுமையில் பூமிää கொடுப்பதில் குபேரன்ää உண்மை பேசுவதில் தர்ம தேவதைää 
வால்மீகி  முனிவரேää நதிகள் எல்லாம் எப்படி கடலில் போய் சேருகின்றனவோää அதை போல நல்லவர்கள் எல்லாம் விரைந்தோடிää ராமரையே சென்று அடைகிறார்கள்.

ஸ்ரீ ராம சரித்திரத்தை படிப்பதால் கிடைக்கும் பலன்:

வால்மீகி  முனிவரை பார்த்து நாரதர்ää ‘பாவத்தை போக்குவதும்ää வேதங்களுக்கு நிகரானதும்ää பரிசுத்தமானதுமான ராமருடைய சரித்;திரத்தை எவன் படிக்கிறானோää அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை அடைகிறான்.”
நோய்  நொடியற்றää நீண்ட ஆயுளைக் கொடுக்கவல்ல ராம சரித்திரத்தை படிக்கிற மனிதன்ää மக்கட் பேறுடனும்ää செல்வத்துடனும் கூடியவனாக வாழ்ந்துää தனது உடலை விட்ட பின் மேலுலகத்தில் ஏற்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறான்” என்று சொல்லி முடித்தார்.

No comments:

Post a Comment