Saturday, May 25, 2019

ஸ்ரீ ராம நாம ஜெப மஹிமை-6:: ஜடாயுவுக்கு நற்கதி கிட்டியது (ஆரண்ய காண்டம் அத்யாயம் : 19)

ஜடாயுவுக்கு நற்கதி கிட்டியது  (ஆரண்ய காண்டம் அத்யாயம் : 19)

ராவணன் ஸீதையை கடத்தி செல்லும் பொழுது வழியில் ஜடாயு என்கிற பறவைகளின் அரசன் ஸீதையை காப்பாற்றும் நோக்கில் ராவணனுடன் கடுமையான யுத்தம் புரிந்து ராவணனுக்கு பெருத்த சேதத்தை விளைவித்தது.
இறுதியில் ஜடாயு ராவணனால் கடுமையாக தாக்கப்பட்டு இரண்டு இறக்கைகளும் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்து, ராமரிடம் விபரம் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தது, ராமர் வந்தவுடன் அவரிடம் ஸீதை ராவணனால் கடத்தப்பட்டு வான்மார்க்கமாக சென்ற திசை போன்ற தகவலை சொல்லிவிட்டு உயிர்நீத்தது.
ராமர், தனது தம்பி லஷ்மணனிடம் ‘பறவைகளின் அரசனாகிய ஜடாயு எனக்காக ராவணனுடன் போரிட்டு உயிர் நீத்திருக்கிறது. மனித இனத்தில் மட்டுமல்லாமல் மற்ற ஜீவராசிகளிலும் கூட உயர்ந்த குணங்களை கொண்ட ஜீவன்கள்இருக்கின்றன என்பதை ஜடாயு நிரூபித்திருக்கிறது. ஸீதையின் பிரிவினால் இருக்கும் துன்பத்தை விட எனக்காக உயிர் நீத்த இந்த பறவையின் மறைவு எனக்கு பெரும் துயரத்தை தருகிறது. நமது தந்தை தசரத மன்னரை போலவே மதிக்க தகுந்தது ஜடாயு. 

லஷ்மணா, ஜடாயுவின் இறுதி சடங்குகளை முறையாக செய்து முடிப்போம் என்று கூறிவிட்டு ஜடாயுவை பார்த்து ‘பறவைகளின் அரசனே, நீ நல்லுலகம் செல்வாயாக யாகங்களை நடத்துபவர்கள் அடையும் நல்லுலகத்தை நீ அடைவாயாக, யுத்த களத்திலிருந்து பின் வாங்காமல் போரிட்டு, உயிர் நீக்கும் வீரர்கள் அடையும் நல்லுலகத்தை நீ அடைவாயாக” என்று ராமர் சொன்னார்.

பின்னர் ஜடாயுவின் இறுதி சடங்குகளை லஷ்மணனுடன் ஸ்ரீ ராமர் செய்து முடித்தார். ஜடாயுவுக்கு நற்கதி கிட்டியது. 

ஸ்ரீ ராம நாம ஜெப மஹிமை - 5:: ஸ்ரீ ராமரிடம் வரம் கேட்ட அகஸ்தியர்

ஸ்ரீ ராமரிடம் வரம் கேட்ட அகஸ்தியர்

துளசிதாசர் இயற்றிய ராமாயணத்தில், அகஸ்தியரை தரிசிக்க ஸ்ரீ ராமர் சென்ற பொழுது, அவரிடம் ராமர், ‘துறவிகளை துன்புறுத்தும் அரக்கர்களை அழிக்கும் வழியை எனக்கு கூறுங்கள்”. என்று கேட்கிறார். அதற்கு அகஸ்தியர், ‘என்னுடைய பக்தியின் காரணமாக உன்னுடைய மகிமையை நான் அறிவேன்”. உலகையெல்லாம் ஆளுகிற நீ, என்னிடம் அறிவுரை கேட்பதா?

நான் உன்னிடம் ஒரு வரம் கேட்கிறேன். ஸீதையுடனும், உன் இளைய சகோதரனுடனும்  கூடி நீ என் இதயத்தில் என்றென்றும் வாழ வேண்டும்.  என்று அகஸ்தியர் கூறுகிறார். 

Saturday, May 11, 2019

ஸ்ரீ ராம நாம ஜெப மஹிமை - 4:: ராமரால் பலன் பெற்ற நிகழ்வுகள (அஹல்யை சாபம் அகன்றது.--ராமரை பூஜிப்பதால் மனம் சுத்தமடையும்)

அஹல்யை சாபம் அகன்றது. 
(ராமரை பூஜிப்பதால் மனம் சுத்தமடையும்)

கௌதம முனிவரின் மனைவி அஹல்யைää ஒருமுறை இந்திரன் கௌதம முனிவரின் உருவத்தை எடுத்துக் கொண்டு அஹல்யையை அணுகி தனது காம ஆசையை வெளிப்படுத்தினார். அஹல்யையும் உடன்பட்டார். 

தனது  வலிமையால் உணர்ந்து கொண்ட கௌதம முனிவர்ää அந்த நொடியே அங்கு தோன்றிää இந்திரனை சபித்தார்ää மேலும் தனது மனைவி அஹல்யையை பார்த்து ‘உன்னை உணவின்றிää காற்றையே உணவாக கொண்டு புழுதியில் புரண்டுää எவர் கண்களுக்கும் தெரியாதோர் இங்கயே நெடுங்காலம் விழுந்து கிடப்பாயாக” 

பின்னொரு  காலத்தில் தூயவனான ராமர் இந்த இடத்திற்கு வருவார்ää அப்போது உன் பாவம் நீங்கும். அவரை பூஜித்து உன்னுடைய கெட்ட மனம் பரிசுத்தமடையும் அதன் பின்னர் உன்னுடைய பழைய உருவத்தை எய்தி நீ என்னை சேருவாய் என்று சபித்தார்ää விஸ்வாமித்ர மகரிஷி ராமää லஷ்மணருடன் மிதிலை வந்த பொழுது இதை விவரித்து அந்த ஆசிரமத்திற்கு வருவாயாக என்று அழைத்தார்

ராமர் அங்கே பிரவேசித்ததும்ää சாபம் நீங்கிய அஹல்யை தன் பழைய உருவை அடைந்தார் தன் தவத்தின் காரணமாகவும்;ää ஸ்ரீராமர் தரிசனம் காரணமாகவும்ää குற்றம் நீங்க பெற்று அஹல்யை தன் கணவர் கௌதம ரி¬ஷியை அடைந்தார்.

ஸ்ரீ ராம நாம ஜெப மஹிமை 3 -- ஸ்ரீ ராமரின் சிறப்புகள்

ஸ்ரீ ராமரின் சிறப்புகள்

பால காண்டத்தில் ஸ்ரீ நாரத முனிவர் ஸ்ரீ ராமரின் நற்குணங்களை முனி சிரேஷ்டரான வால்மீகிக்கு விவரிக்கிறார்.
‘இக்ஷ்வாகு  வம்சத்தில் பிறந்துää இப்பொழுது அயோத்யையை ஆண்டு வருகிற ஸ்ரீ ராமர் என்கிற அரசர் நற்குணங்கள் அனைத்தையும் பெற்றவர்……... ..
தன்னை நம்பியவர்களுக்கு தன்னையே அடிமையாக்கிக்  கொள்ளும்  குணவான்ää 
....எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாக திகழும் அந்த அயோத்தி மன்னர் ராமர் கம்பீரத்தில் கடல் தைரியத்தில் இமயமலைää வீரத்தில் விஷ்ணுää இன்பம் அளிக்கும் தோற்றத்தில் சந்திரன்ää கோபத்தில் பிரளயாக்னிää பொறுமையில் பூமிää கொடுப்பதில் குபேரன்ää உண்மை பேசுவதில் தர்ம தேவதைää 
வால்மீகி  முனிவரேää நதிகள் எல்லாம் எப்படி கடலில் போய் சேருகின்றனவோää அதை போல நல்லவர்கள் எல்லாம் விரைந்தோடிää ராமரையே சென்று அடைகிறார்கள்.

ஸ்ரீ ராம சரித்திரத்தை படிப்பதால் கிடைக்கும் பலன்:

வால்மீகி  முனிவரை பார்த்து நாரதர்ää ‘பாவத்தை போக்குவதும்ää வேதங்களுக்கு நிகரானதும்ää பரிசுத்தமானதுமான ராமருடைய சரித்;திரத்தை எவன் படிக்கிறானோää அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை அடைகிறான்.”
நோய்  நொடியற்றää நீண்ட ஆயுளைக் கொடுக்கவல்ல ராம சரித்திரத்தை படிக்கிற மனிதன்ää மக்கட் பேறுடனும்ää செல்வத்துடனும் கூடியவனாக வாழ்ந்துää தனது உடலை விட்ட பின் மேலுலகத்தில் ஏற்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறான்” என்று சொல்லி முடித்தார்.

ஸ்ரீ ராம நாம ஜெப மஹிமை 2


‘அனைத்து நல்லதும் கிடைக்கும்ää எல்லாம் நல்லதாகவே இருக்கும்ää மனதுயரம்ää மனசங்கடம் எல்லாம் அழிந்து போகும்ää ராமர் ஒருவருடைய வாழ்க்கையின் உள்ளே வந்தவுடன்”  - காஞ்சி பெரியவர் ஸ்ரீ ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸ்வாமிகள் சொன்னது.

மஹா பெரியவா சொல்வதுண்டுää நாம் கண்களை மூடிää ‘ராமää ராமää ராம” என்று ஜெபம் பண்ண ஆரம்பித்ததும் அந்த இடத்தில் ஒருவர் கண்ணீருடன் காத்துக் கொண்டிருப்பார்ää அவர் மூலமாகவே அனைத்து ஜெயமும் சுலபமாக கிடைக்கும். அந்த நபர்தான் ஆஞ்சநேயர். 

ராம ஜெயம் செய்வதற்கு பெரிய சிரமப்பட வேண்டியதில்லைää சில பூஜா விதிமுறைகள் மாதிரிää பகவானை வரவேற்றுää பூஜா விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டியதில்லை. எங்கு ‘ராம” ஜெபம் செய்யப்படுகிறதோ அங்கு ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி தாமாகவே வந்து நமது வலபுறம் அமர்ந்து எல்லாவகையான பாதுகாப்பும் கொடுத்துää தாமே குருவாக இருந்து நமது நிலைகளை உயர்த்திää இந்த வாழ்க்கையிலும்ää மறைவாழ்க்கையிலும் வளமாக வாழ அனுகிரஹம் புரிவார்


‘இந்த  பிச்சைகாரனிடம் ஒன்றுமே இல்லைää எல்லா அற்புதங்களும் ‘ராம” நாமத்தினால் தான் நடக்கிறது”. - யோகி ஸ்ரீ ராம்சுரத் சுவாமிகள்
ஸ்ரீ  யோகி ராம் சுரத் ஸ்வாமிகள் திருவண்ணா மலையில் இருக்கும் போது நடத்தப்பட்ட தெய்வசித்து இரவில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு குதிரை தவறி கிணற்றில் விழுந்துவிட்டது. மறுநாள் மக்கள் எவ்வளவோää முயன்றும் குதிரையை மேலே தூக்க முடியவில்லை. யோகி ராம்சுரத்குமார் சிறிது நேரம் காத்திருந்தார். பிறகு எல்லோரையும் விலகி போக சொல்லிவிட்டு குதிரையை உற்றுபார்த்தார்ää குதிரையும் பார்த்தது.
‘ஜெய் ராம்” என்று ஒருமுறை உரக்க கத்தினார். குதிரை ஒரே துள்ளலில் கரையேறியது. ஓடி போயிற்று. அருகிலிருந்தவர்கள் வியந்து இது எப்படி சாத்தியம் என்று கேட்கää ‘இந்த பெயரை சொன்னால் போதும்.... எல்லாவற்றையும் கரையேற்றும்” என்றார்.
பாலகுமாரன் எழுத்திலிருந்து. 

ஸ்ரீ ராம நாம ஜெப மஹிமை 1



உங்களுக்கு முப்பது ஜென்மம் அன்னதானம் செய்த புண்யம் இருக்கிறது


இங்கு மேற்கோள் காட்டபட்ட ராமாயண உதாரனங்கள், திரு. சோ, அவர்கள் எழுதிய " வால்மீகி ராமாயணம் " புஸ்தகத்திலிருந்து   எடுக்கப்பட்டது.