Saturday, May 11, 2019

ஸ்ரீ ராம நாம ஜெப மஹிமை 2


‘அனைத்து நல்லதும் கிடைக்கும்ää எல்லாம் நல்லதாகவே இருக்கும்ää மனதுயரம்ää மனசங்கடம் எல்லாம் அழிந்து போகும்ää ராமர் ஒருவருடைய வாழ்க்கையின் உள்ளே வந்தவுடன்”  - காஞ்சி பெரியவர் ஸ்ரீ ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸ்வாமிகள் சொன்னது.

மஹா பெரியவா சொல்வதுண்டுää நாம் கண்களை மூடிää ‘ராமää ராமää ராம” என்று ஜெபம் பண்ண ஆரம்பித்ததும் அந்த இடத்தில் ஒருவர் கண்ணீருடன் காத்துக் கொண்டிருப்பார்ää அவர் மூலமாகவே அனைத்து ஜெயமும் சுலபமாக கிடைக்கும். அந்த நபர்தான் ஆஞ்சநேயர். 

ராம ஜெயம் செய்வதற்கு பெரிய சிரமப்பட வேண்டியதில்லைää சில பூஜா விதிமுறைகள் மாதிரிää பகவானை வரவேற்றுää பூஜா விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டியதில்லை. எங்கு ‘ராம” ஜெபம் செய்யப்படுகிறதோ அங்கு ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி தாமாகவே வந்து நமது வலபுறம் அமர்ந்து எல்லாவகையான பாதுகாப்பும் கொடுத்துää தாமே குருவாக இருந்து நமது நிலைகளை உயர்த்திää இந்த வாழ்க்கையிலும்ää மறைவாழ்க்கையிலும் வளமாக வாழ அனுகிரஹம் புரிவார்


‘இந்த  பிச்சைகாரனிடம் ஒன்றுமே இல்லைää எல்லா அற்புதங்களும் ‘ராம” நாமத்தினால் தான் நடக்கிறது”. - யோகி ஸ்ரீ ராம்சுரத் சுவாமிகள்
ஸ்ரீ  யோகி ராம் சுரத் ஸ்வாமிகள் திருவண்ணா மலையில் இருக்கும் போது நடத்தப்பட்ட தெய்வசித்து இரவில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு குதிரை தவறி கிணற்றில் விழுந்துவிட்டது. மறுநாள் மக்கள் எவ்வளவோää முயன்றும் குதிரையை மேலே தூக்க முடியவில்லை. யோகி ராம்சுரத்குமார் சிறிது நேரம் காத்திருந்தார். பிறகு எல்லோரையும் விலகி போக சொல்லிவிட்டு குதிரையை உற்றுபார்த்தார்ää குதிரையும் பார்த்தது.
‘ஜெய் ராம்” என்று ஒருமுறை உரக்க கத்தினார். குதிரை ஒரே துள்ளலில் கரையேறியது. ஓடி போயிற்று. அருகிலிருந்தவர்கள் வியந்து இது எப்படி சாத்தியம் என்று கேட்கää ‘இந்த பெயரை சொன்னால் போதும்.... எல்லாவற்றையும் கரையேற்றும்” என்றார்.
பாலகுமாரன் எழுத்திலிருந்து. 

No comments:

Post a Comment