Tuesday, October 13, 2020

ப்ரம்ம தேவர் அருளிய ஸ்ரீ ராமர் ஸ்துதி :

 

‘நீயே ஸீதர்ஸண சக்கரத்தை ஏந்தி நிற்கிற நாராயணன்! 

நீயே அழியாத ப்ரம்மன்;!

தொடக்கம்ää இடைää முடிவு ஆகிய நிலைகளில் அழியாத உண்மை நீயே! 

அனைத்து உலகங்களையும் இயக்கி வைக்கிற விதி நீயே! 

நான்கு கைகளை கொண்ட விஷ்ணு நீயே! 

பெரும் பலம் படைத்த கிருஷ்ணன் நீயே! 

தேவர்களின் படைத்தலவனாகிய முருகன் நீயே! அறிவும் நீயே! 

ஆற்றலும் நீயே! தன்னை அடக்கும் தன்மையும் நீயே! 

நீயே தொடக்கம்ää நீயே முடிவு!

அனைவருக்கும் பாதுகாப்பு நீயே! 

அனைவருக்கும் அடைக்கலம் நீயே! வேதங்கள் நீயே! 

மூவுலகங்களையும் படைத்தவன் நீயே! நீயே வேள்வி! 

ஓம் என்னும் பொருள் நீயே! 

உயர்ந்தவை எல்லாவற்றிலும் உயர்வு நீயே!

உன்னுடைய தோற்றமோää உன்னுடைய முடிவோää உன்னுடைய உண்மை நிலையோ யாரும் அறியாததே! 

எல்லா திசைகளிலும் இருப்பவன் நீயே! 

ஆகாயத்திலும்ää மலைகளிலும்ää நதிகளிலும்ää இருப்பவன் நீயே! 

பூமி அழிகிறபோது ஆதிசேஷன் மீது காட்சியளிப்பவன் நீயே!

மூவுலகங்கனையும் கந்தர்வர்களையும்ää அரகர்களையும்ää படைக்கப்பட்ட       

அனைத்தையும்ää தெய்வங்கனையும் ஆதாரமாக நின்று காப்பவன் நீயே! 

ராமாää ப்ரம்மதேவன்ää உன்னுடைய இதயம்ää சரஸ்வதி உன்னுடைய நா!

நீ கண் இமைக்கும் போதுää உன் கண்கள் முடினால் அது இரவுää அது திறந்தால் அது பகல் !

உன்னுடைய கோபத்தின் சின்னம் தீ ! 

உன்னுடைய சாந்தத்தின் சின்னம் சந்திரன் !

உன்னுடைய உறுதியின் சின்னம் பூமி! 

மூன்று காலடிகளால் மூவுலகையும் அளந்த மஹாவிஷ்ணு நீயே ராமா! 

ஸீதைதான் லஷ்மி தேவி !

படைக்கப்பட்ட அனைத்துக்கும் அதிபதியாகிய நீää ராவணணை அழிப்பதற்காக இந்த மனித  

உருவை எடுத்தாய் அந்த காரியம் முடிந்து விட்டது. 

உன்னுடைய புகழை கூறி உன்னை துதிப்பது என்றும் வீணாவதில்லை. உன்மீது பக்தி செலுத்துபவர்கள் தோல்வி அடைவதில்லை. 

உன்னுடைய பக்தர்கள் இம்மையிலும்ää மறுமையிலும் நன்மை பெறுவார்கள்”. 

இதை சொல்பவர்களுக்கு எந்;த குறையும் ஏற்படாமல் இருக்கும் என்று தiது ராமாயணத்தில் வால்மீகியே குறிப்பிட்டிருக்கிறார்.


No comments:

Post a Comment