அன்பு நண்பர்களுக்கு வணக்கம்ää
இந்த புத்தாண்டில் இன்னுமொரு நல்ல சந்திப்பை நமக்கும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். என் மனதுக்குப் பட்டவாறு நான் ஏற்படுத்த முனைந்திருக்கிறேன். இந்த நல்ல என்ற வார்த்தை ஒவ்வொரு மனிதரின் மனதுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. அவற்றை விவரிக்கவோää விவாதிக்கவோ முடியாது. ஆனால் இப்படி இருந்தால் இது நல்லதுää இப்படிச் செய்தால் இது நல்லது என்று சொல்வதும்ää சிந்திப்பது என்னைப் பொருத்தவரையில் சிறந்தது.
எந்த ஒரு மனிதனும்ää பெரியோர்கள்ää சான்றோர்கள்ää அறிவு நிறைந்தவர்கள்ää அனுபவமிக்கவர்கள்ää தர்மம்ää நீதிää சாஸ்திரம் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்பது அதன் வழி நடப்பது என்பது நன்மை பயக்கும். இவற்றை நாம் கடைபிடிக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கைத் தரம் உயரும்ää மேலும் அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் வந்து சேரும். இவ்வகையில் நம்முடைய இதிகாசங்களில்ää அதில் வரும் இறைவனின் அவதாரங்கள்ää பெரியோர்களின் வார்த்தைகளைக் கேட்டுää கற்றுää அறிந்துää அதன்படி நடந்துää அதற்கான பலன்களைப் பெற்றதற்கான சான்றுகள் உள்ளன.
அதன்படி பார்த்தால்ää மனிதன் வாழுகின்ற முறைகள் அந்தந்த காலங்களுக்கு ஏற்ப போதிக்கப்படுகின்றன. இந்து மதத்தை எடுத்துக் கொண்டோமானால் முதற்காலம் வேதம்ää இரண்டாவதாக இராமாயணம்ää இராமாயணத்திற்குப் பிறகு மகாபாரத காலம் மட்டும் இராமனுடைய வழிமுறைகள் பின்பற்றப்பட்டத. அதாவது இராமாயணக் கதையின் கருத்துக்கள் பின்பற்றப்பட்டது. மூன்றாவதாக மகாபாரதம். அதாவது தற்போது நாம் மகாபாரதக் கருத்துக்களை பிற்பற்றுவதாக இருக்கிறது.
அதுபோல் இஸ்லாம் மதத்தில் முகமது நபிகள் அவர்களுக்கு முன் நிறைய நபிகள் தோன்றி அந்தந்த காலத்திற்கு ஏற்ப மக்களுக்கு வாழும் முறைகளையும்ää தர்மங்களையும் போதித்திருக்கிறார்கள். அதுபோல் கிறிஸ்தவ மதத்திலும்ää இறைவன் பலமுறை பல காலங்களுக்கு ஏற்றவாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். கடைசியில் ஏசுவாக அவதரித்தார்என்று வேதாகமம் கூறுகிறது.
அவ்வாறு வாழும் முறைகளைää இந்து மதத்தின் படி மகாபாரதத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் மிக முக்கியமாக கருதப்படுவது பகவத் கீதை மற்றும் விதுர நீதி.
பகவத் கீதையில் மனிதன் வாழும் முறைகளைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஆனால் விதுர நீதியில் மனிதன் இப்படியிருந்தால் இன்ன பலம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த விதுர நீதியில் விளக்கப்பட்டவை எல்லா காலத்திற்கும் மிக பொருத்தமாக இருக்கக் கூடியது என்பது என் கருத்து.
விதுர நீதியில்
பண்டிதரின் குணங்கள்
மூடரின் குணங்கள்
அரசரின் குணங்கள்
அரசரின் கடமைகள்
ஆலோசனை செய்யக்கூடாத நபர்கள்
மனிதன் அகற்றவேண்டிய ஆறு குற்றங்கள்
விலக்கி வைக்க வேண்டிய ஆறு குற்றங்கள்
இருக்க வேண்டிய எட்டு குணங்கள்
அறிந்து கொள்ள வேண்டிய உலக இயல்பு
ஆகியவற்றை மிக நன்றாக விதுரர் விவரித்துள்ளார்.
நம்மை நல்வழிப் படுத்துவதற்கு நான் ஏற்கனவே கூறியுள்ளபடி பெரியோர்கள்ää சான்றோர்கள் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்வது என்பது எப்பொழுதும் நன்மையே பயக்கும் என்ற கருத்தின்படி இதை நான் எழுதுகிறேன்.
விதுர நீதி :
திருதராஷ்டிரர் மிகவும் குழம்பியிருந்த நிலையில்ää விதுரரை அழைத்து “நமக்கும் சரிää மற்றவர்களுக்கும் சரி நன்மை தரக்கூடிய வழி என்ன என்பதை எனக்குச் சொல்” என்றார் விதுரர். முதலில் பண்டிதரின் குணங்களில் இருந்து ஆரம்பிக்கிறார்.
பண்டிதரின் குணங்கள் :
கோபம்ää மகிழ்ச்சிää மரியாதையின்மைää வெறிää தான் வணக்கத்திற்கு உரியவன் என்ற எண்ணம் - இவற்றால் பாதிக்கப்படாதவன் பண்டிதன் என்று கூறப்படுகிறான்.
பண்டிதனாகப்பட்டவன் நடத்தும் ஆலோசனையை பிறரால் தெரிந்து கொள்ள முடியாது. அவன் ஒரு செயலைச் செய்த பிறகுதான்ää மற்றவர்களால் அதை புரிந்து கொள்ள முடியும்.
மிகவும் பொறுமையுடனும்ää கவனத்துடனும்ää கேட்டுää விஷயங்களை புரிந்து கொள்கிறான். மற்றவர்கள் அவனிடம் கேட்காத போது அவன் ஆலோசனை கூறுவது இல்லை.
நன்றாக யோசித்து ஒரு செயலை தொடங்கிய பிறகு அதை பாதியில் விடுவதில்லை.
பண்டிதனுடைய வாக்கு சூட்ச்சமமானது. அவன் ஒரு கருத்தைச் சொல்லும் பொழுதுää அது மற்றவர்களுக்கு விசித்திரமாகக் கூட தெரியலாம். ஆனால் எதிர்காலத்தில் இன்னும் நடக்கப் போகிறது என்பதை தன்னுடைய அறிவின் மூலம் தெரிந்து சொல்லக் கூடியவன்.
அவனுடைய அறிவு காலத்திற்கு ஏற்ப செயல்படும். கர்வம் கொள்ளமாட்டான்.
பிறர் பாராட்டும் பொழுது மகிழ்வதும்ää பிறர் அவமதிக்கும் பொழுது வருத்தப்படுவதும் இல்லை.
அடையமுடியாததை அடைந்துவிட வேண்டும் என்று முனைவதில்லை.
தன்னிடமிருந்து நழுவிப் போனதை நினைத்து மன உளைச்சல் பட்டுக் கொள்வதும் பண்டிதனின் வழக்கமன்று.
தர்மத்தின் பாதையில் இருந்து அவன் சிறிதும் அகலுவது கிடையாது.
மூடரின் குணங்கள் :
ஓரளவு கற்றபிறகு மிகவும் கற்றுவிட்டதாக நினைப்பவர்கள் கெட்டவழியில் சென்றாவது செல்வத்தை ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள்.
நண்பர்கள் விஷயத்தில் வஞ்சகமாக நடந்து கொள்பவர்கள் தன்னிடம் விருப்பமில்லாதவனை விரும்புகிறவர்கள் தன்னை விரும்புகின்றவர்களை அலட்ச்சியப் படுத்துகிறவர்கள்ää தானே வலியச் சென்று விரோதத்தை கொள்பவர்கள்.
தன்னை யாரும் கேட்காதபோதே அறிவுரை கூறுகிறவர்கள். அழைக்காத இடங்களில் நுழைபவர்கள்ää நான் எனக்கு மட்டும் என்ற குணமுடையவர்கள்.
தன்னிடம் சக்தியில்லாத போது கோபம் கொள்கிறவர்கள்.
நாம் மேலே அறிந்த பண்டிதர் மற்றும் மூடர்களின் குணங்களை புரிந்துகொள்வதற்கு இதன் விதியை நமக்கு தெரிந்தவர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் நன்றாக புரியும். அதிலும் குறிப்பாக அரசியர் தலைவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் நன்றாக புரியும்.
அரசரின் கடமைகள் :
அரசர் அறிவுப்பூர்வமாகவே எல்லாப் பிரச்சனைகளையும் அணுக வேண்டும்.
நண்பர்கள்ää பகைவர்கள்ää சக்தி இல்லாதவர்கள் - என்ற மூன்று வகையானவர்களையும் சாமää பேதää தண்ட முறைகளைப் பயன்படுத்தி தன் வசமாக்க வேண்டும்.
அரசர் தனது இந்திரியங்களை வெல்ல வேண்டும். பெண்கள்ää சூதாட்டம்ää வேட்டைää மதுபானம்ää மிகவும் கடுமையான சொற்கள்ää மிகவும் கடுமையாக தண்டனைää செல்வத்தை விரையமாக்குதல் என்ற ஏழு தீமைகளையும் அரசன் ஒதுக்கித் தள்ளவேண்டும்.
சாதாரண மனிதர்களைää நோய் கொல்லுகிறது. விஷம் கொல்லுகிறது. ஆனால் அரசனை தவறான ஆலோசனை கொன்றுவிடும். அரசன் தான் மட்டும் அமர்ந்து எந்த காரியத்தையும் ஆலோசிக்கக்கூடாது.
அரசனுக்கு பொறுமை வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்கும் அரசனிடம்ää மற்றவர்கள் கொள்ளும் பகை தானாகவே அழிந்து போகிறது.
ஆலோசனை செய்யக்கூடாத நபர்கள் :
நான்கு வித நபர்களுடன் ஆலோசனை செய்யக்கூடாது. அறிவில் குறைந்தவர்கள்ää விரைவில் செய்து முடிக்க வேண்டிய காரியத்தில் தாமதம் செய்பவர்கள்ää சோம்பல் உடையவர்கள்ää முகஸ்துதி செய்து பிழைக்க நினைப்பவர்கள் ஆகிய நால்வரிடம் ஆலோசனை செய்யக் கூடாது.
மனிதன் அகற்றவேண்டிய ஆறு குற்றங்கள் :
அதிக தூக்கம்ää சோம்பல்ää அச்சம்ää மற்றவர்கள் மீது கோபம் முயற்சியின்மைää விரைந்து செயல்படாமை.
விலக்கி வைக்க வேண்டிய ஆறு குற்றங்கள் :
பெண்கள்ää சூதாட்டம்ää வேட்டைää மதுபானம்ää மிகவும் கடுமையான சொற்களைப் பேசுவதுää மிகவும் கடுமையான தண்டனைகளை அளிப்பதுää பொருளை வீணாகச் செலவிடுவதுää இந்த ஏழு குற்றங்களும்ää தன்னை நன்றாக ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ள அரசனைக் கூட அழிக்கும் சக்தி உடையவை.
இருக்க வேண்டிய எட்டு குணங்கள் :
அறிவுää நல்ல குலத்தில் பிறப்புää அடக்கம் உடைமைää நல்ல கல்விää வீரம்ää அளவறிந்து பேசுவதுää தன்னுடைய சக்திக்கு தக்கப்படி தர்மம் செய்து – செய்நன்றி மறவாமல் இருப்பது.
அறிந்து கொள்ள வேண்டிய உலக இயல்பு :
நல்ல காரியமாக இருந்தாலும் சரி கெட்ட காரியமாக இருந்தாலும் சரி பிறர் கேட்காமல் அது பற்றி தன்னுடைய கருத்தை மற்றவர்களுக்குச் சொல்பவர் அவமானத்தை அடையக் கூடும்.
எதனால் எதற்கு விரோதம் உண்டாகும்?
எதனால் எது அழியும்? போன்ற விஷயங்களை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
கிழட்டுத் தன்மை மனிதனின் அழகை அழிக்கிறது.
ஆசை தைரியத்தை அழிக்கிறது
பொறாமை தர்மத்தை அழிக்கிறது
கோபம் செல்வத்தை அழிக்கிறது
தகாதவர்களை அண்டுவது குணத்தை அழிக்கிறது – ஆனால்
செல்வத்தினால் ஏற்படும் அகம்பாவம் எல்லாவற்றையும் அழித்துவிடும்.
இரவில் பசியின்றி வாழ என்ன தேவையோää அதை பகல் காலத்திலேயே சம்பாதிக்க வேண்டும்.
மழை காலத்தில் என்ன தேவைப் படுமோää அதை
மற்ற மாதங்களில் சம்பாதிக்க வேண்டும்.
முதுமை அடைந்த பிறகு நிம்மதியாக வாழ்வதற்கு
என்ன தேவையோ அதை இளமையிலேயே சம்பாதிக்க வேண்டும் - அதுபோல
இந்த உலகை விடடு நாம் செல்கிறபோது – நமக்கு
நிம்மதியை அளிக்கத்தக்கது எதுவோ அதை
உயிருள்ள அளவும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
என்பது விதுர நீதியில் கூறப்பட்டவையின் சுருக்கம்.
இதை புரிந்துகொண்டுää நாம் செல்லும் இடத்தில் செயல்படுத்தினால் மனநிறைவு ஏற்படும்.
- ஷங்கர்