Tuesday, December 17, 2019

கர்மவினை பற்றிய வேறு விதமான பார்வையே இப்பதிவு.

கர்மவினை   பற்றிய வேறு விதமான  பார்வையே இப்பதிவு.

1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்?

3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?

4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?

போன்ற பல கேள்விகளுக்கு முழு விளக்கமே இப்பதிவு.

பதிவிற்குள் செல்வதற்கு முன் ஒரு கதையை பார்த்து விடுவோம்

சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்த போதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.

அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.தனது இன்பத்திற்காக எந்த ஒரு கொடுமையான செயலையும்
குணமுடையவனாக அவனிருந்தான். அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்

இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்து விட்டது.

கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்மீது தனது பக்தி உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக் கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான். இதற்கு ஒப்புக் கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.

போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில்வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்குஅதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரத்தினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவது போல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக
கட்டிக் கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில் வேலை செய்து கொண்டிருந்த சித்தனை மாடுமுட்டி கடுமையான காயங்களுடன் படுத்த படுக்கை ஆக்கி விட்டது விதி.

இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று சித்தனின் மனைவி அவனை விட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியவில்லை. எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னாடியுள்ள கிணற்றில் குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான்.

ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன் வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்கதோனவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.அனைத்தையும் பொறுமையுடன் கேட்டு கொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவனின் அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன்.

இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார்

சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன் பிறவியில் வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.நீ உன் மனைவியை மதித்தது கூட கிடையாது. மாறாக வித்தனோ முன் பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான்,அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின் பெருபாலனவையை நானே ஏற்று கொண்டேன்,மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவ பதிவையே அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்த பின் அவன் பாவ பதிவுகள் செயல்பட தொடங்கும்.

வித்தனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.
அவன் செய்த அனைத்து புண்ணியங்களும் ஒட்டு மொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்து விட்டன. இனி நடக்க விருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.

நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல் நிலைநலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்த படுக்கையாகி விட்டான். அவனதுமனைவியும் திடீரென்று இறந்து விட, அவன்கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன்சொத்துக்கள் அனைத்தையும் பரித்துக் கொண்டு வெளியே துரத்தி விட்டனர்.தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான்.

ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.

ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க விதி விலக்குகளும் உண்டு. அதுதான்"பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தை பார்த்து விடுவோம். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக் கொள்வோம்

இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில்பட்டு இரத்தம் வந்து விடுகின்றது. இதைவினை என்று எடுத்துக் கொள்வோம். அந்தஇடத்திலிருந்து நீங்கள் தப்பித்து ஓடி விட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான
எதிர்வினை செயல்படும். எப்படியென்றால் நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போதுஉங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வரவேண்டும் என்ற ஒரு விதி செயல்படும்.

நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால் அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன் தப்பிக்க நினைக்கும் போது அதாவது அந்த கல்லை தாண்டி செல்ல முற்படும் போது ஒருமாடோ அல்லது வண்டியோ உங்களை குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால்பட வேண்டிய இடத்தில் தப்பிக்க நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதேகல்லால் உங்கள் தலையில் அடிபட்டு விடும்.ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காகவருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என வைத்து கொள்வோம். இங்கேயும் அதே கர்மவினைதான் செயல்படும்.

அதாவது நீங்கள் அந்த தெரு வழியே செல்லும் போது உங்கள் கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வரவேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும். ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு. எப்படியென்றால் நீங்கள் அதே தெரு வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களைஅறியாமல் மாட்டு சாணியிலோ அல்லதுசேற்றிலோ காலை வைத்து விடுவீர்கள்.

இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில் உள்ள சேற்றை துடைப்பதற்காக தேய்த்து விட்டு சென்றுவிடுவீர்கள். அதாவதுபொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தி விட்டு சென்று விடுவீர்கள். இதில்அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்த விதசேதமும் ஏற்படவில்லை.

நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்தகல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால்அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்றது. இதைதான் " தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது " என்பர் பெரியோர்கள். அந்த பொருளுக்கும்
உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால் உங்கள் செயலுக்குரிய எதிர் வினையும் நடந்து முடிந்து விடுகின்றது. உங்கள் செயலை கொண்டே வினையும், வினையை கொண்டே எதிர்வினையும், அந்தஎதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும் நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி ஒன்றுமில்லை.

இதைத்தான் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்றனர். எந்த செயலுக்கும் வினை ஏற்பட கூடாது என்றால் "நான்"என்பதை விட்டுவிட வேண்டும். ஆன்மீகத்தில் இதற்கு பெயர் பூரண சரணாகதி.அந்த விதிவிலக்கு என்பது கூடஇவர்களுக்குதான். தன்னை அறியமுற்படுவதால் அவர்களுக்கு தரப்படும் சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு மட்டும்?

எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம் என்ற புரிதல் ஏற்படும் போது உங்களை சுற்றி நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.

கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்றஎண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான வினைகள்தான் தற்போது நீங்கள்அனுபவித்து வரும்கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும்.

புரிதல் ஏற்படும் போது எதையும் ஏற்று கொள்ளும் பக்குவம் வந்து விடும். அப்படிப்பட்ட பக்குவத்தை நீங்கள் அடையும் போது, உங்களின் 95%கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர்அனுபவித்து விடுவார். காரணம்!! நீங்கள்அவர் மீது கொண்டுள்ள அதிகப்படியானஅசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்தஅவர் ஏற்கனவே பிறவி கடலை கடந்தவராக இருப்பார்.

ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெருவழியே சென்று கொண்டு இருந்தார். திடீர்என்று அங்கே உள்ள சாக்கடையில்குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர்குழாயில் காலை கழுவிவிட்டு சென்று விட்டார்.இதை பார்த்தவர்களுக்கு அவர் பைத்தியகாரன் என்று தோன்றலாம். ஆனால் அவரை பொறுத்தவரை பொருளுக்கும் அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்ம வினைகளை தான் அவர் அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.

இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்விவரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரைஅவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது.

காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம்தான் உள்ளது. அதாவது அவருக்கு மனம் என்றஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான்இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும் உதிப்பதும் கிடையாது!! மறைவதும்கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது "என்று சொல்லப்படுகின்ற ஒருவன் அவர் மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள் சுற்றி கொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும்என்ற விதி இருக்கும், ஆனால் இவன்உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக அந்த ஞானி அந்த விதியை முடித்து வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ணஅலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன்தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க தொடங்கும் போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவ
புண்ணிய கணக்குகளை அழித்து விடுவார்.முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்து விடுகின்றன.

அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும் போது எதையும் கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!நீங்கள் கேட்டுதான் பெற வேண்டும் என்ற அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள் கேட்க நினைப்பது கூட சிறியதாக தான் இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே சிறந்தது ஆகும்.

இதில் பூரண சரணாகதி என்பது இனிஅனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும். "நான்" என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.அதற்கு பிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொருசெயலும் அவன் செய்வதாகவே இருக்கவேண்டும்.

இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க வேண்டும் என்பதை விளக்குவதே இப்பதிவு.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது மாறிக் கொண்டே இருக்கும். அந்ததேவைகளுக்கு தகுந்தவாறு வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல் உள்ளவர்களை பொறுத்தவரை, அவர்களுடைய வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில்"ஒரே ஒருமுறை" தான் இருக்குமே தவிர ஒவ்வொரு முறையும் இருக்காது. ஏனென்றால் அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயேவேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில் அத்தனையும் அடங்கியும் விடும்.

இதையும் புரிந்து கொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.

ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம்அவள் வழிபடும் தெய்வம் மட்டும் தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவள் கனவு. கடவுளிடமும் இதைகுறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும் பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால் இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை.மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.சிறிது காலம் தான் சென்றது மகனுக்கு விபத்து ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு
தெரிந்ததெல்லாம் அவனே என்பதால் மறுபடியும் ஒரு வேண்டுதல்!!

இதுவே அத்தாய் கடவுளே "எனக்குஅமைதியையும் சந்தோஷத்தையும் கொடு"என்று ஒரே ஒரு முறை மட்டும் வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை வசந்தமாகி இருக்கும்.

புரியும்படி கூற வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல் என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால் ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய அவசியம் இருந்தது. மேலும் எதிர் வரும் கர்மவினை இதுதான் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு இந்த தேவை நிறைவேறினால் நான் நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக தீர்வை நாடுகின்றோம்.

உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம் அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படிஅந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே ஒரு முறையோடு முடிவடைந்து விடுகின்றது.இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன் பெறுவர். எப்படியென்றால் உங்கள்அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.

உங்கள் தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ,உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள் முன்ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியுமா?? முடியாதல்லவா!!

எனவே உங்கள் அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற உங்களை சார்ந்த மற்றும் உங்களை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.

இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால் இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனையும் ஒருமுறைதான்!!

Tuesday, November 19, 2019

நன்றி கூறுதல், மன்னிப்பு கோருதல், வாழ்த்துதல்


*நன்றி கூறுதல், மன்னிப்பு கோருதல், வாழ்த்துதல்.*

தாய், தந்தை, உடன்பிறந்தவர்கள்

மனைவி, குழந்தைகள்
மனைவியின் உறவினர்கள்
என் உறவினர்கள்

நண்பர்கள், உடன்பணிபுறிபவர்கள், மேலதிகாரி, உயரதிகாரி, நிர்வாக அதிகாரி

எனக்கு அறிமுகமானவர்கள்

எனக்கு கல்வியை போதித்த அனைத்து ஆசிரியர்களுக்கும்

வாழ்க்கையில் வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருக்கும் அனைத்து குருமார்களும்

என்னை வந்து சேருகின்ற பணத்திற்கும், செல்வத்துக்கும்

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும், ஜீவன்களுக்கு, ஆத்மாகளுக்கும்
பிரபஞ்ச ஆற்றலுக்கும்
பிரபஞ்சத்திற்கு

அனைத்து தேவர்களுக்கும், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், யோகிகள், சாதுக்கள், புண்ணிய ஆத்மாக்களுக்கும்

அனைத்து தெய்வங்களுக்கும், நான் வணங்கும் தெய்வத்திற்கும்

என் சார்பிலும், என் குடும்பத்தார் சார்பிலும்
பணிவான வணக்கங்கள்

ஸ்ரீ ராமரின் அருளால் உங்களுக்கு
 சாந்தமும்
சமாதானமும்
மகிழ்ச்சியும்
வளமான வாழ்க்கையும்
என்றென்றும்
கிடைப்பதற்கு
நன்றி

நீங்கள் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் செய்த அனைத்து உதவிகளும், அன்புக்கும், ஆதரவுக்கும், அனைத்து நற்க்காரியங்களுக்கும்

என் சார்பிலும், என் குடும்பத்தினர் சார்பிலும்
நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உங்களால்  என் குடும்பத்தாருக்கும், ஏற்பட்ட கஷ்டங்களையும், சஞ்சலங்களையும்,  துன்பங்களையும், என் சார்பிலும், நானும் என் குடும்பத்தாரும் மன்னிக்கிறோம்.

என்னாலும், என் குடும்பத்தினராலும் உங்களுக்கு ஏற்பட்ட துன்பதத்திற்கும், கஷ்டத்திற்கும், சஞ்சலத்திற்கும்

என் சார்பிலும், என் குடும்பத்தினர் சார்பிலும்
நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

நீங்கள் என் நன்றியையும், மன்னிப்பு கோரிக்கையும் ஏற்றுக்கு கொண்டு

நானும், என் குடும்பத்தினரும்

ஸ்ரீ ராமரின் அருளால்
 சாந்தமும்
சமாதானமும்
மகிழ்ச்சியும்
வளமான வாழ்க்கையும்
என்றென்றும்
கிடைப்பதற்கு
வாழ்த்துதலையும்
ஆசியையும் வழங்குவதற்கு நன்றி

பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி
பிரபஞ்சத்திற்கு நன்றி
ஸ்ரீ ராமருக்கு நன்றி

Friday, August 9, 2019

Sai Baba Sayings

என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.

துன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.-ஷிர்டி சாய்பாபா

முன் புறத்திலும், பின் புறத்திலும், நான் தென்படுவேன்

யார் எனக்கு உணவு அளிக்காமல் உட்கொள்ளமாட்டார்களோ, யார் என்னை எல்லா காரியங்களிலும் நினைத்துகொள்வார்களோ, அவர்களின் முன் புறத்திலும், பின் புறத்திலும், நான் தென்படுவேன்.- ஷிர்டி சாய்பாபா

நன் உன் கண் இமையைப் போன்றவன்

உன் நட்பு, காதல், அனுராகம், விஸ்வாசம் முதலியவற்றை என் மேல் வைத்திரு,
நன் உன் கண் இமையைப் போன்றவன். உன் முயற்சி இல்லாமலேயே நான் உன்னை காப்பாற்றுவேன். ஷிர்டி சாய்பாபா

கர்மங்களை குறைத்துக்கொள்ள

கர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை நினைதுக் கொண்டிருந்தால் என்மேல் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா


பாபாவின் விரதம்

பூரண சரணாகதியடைந்த பக்தனை எந்தவிதமான ஆபத்தும் வராமல் காப்பாற்றுவது பாபாவின்  விரதம். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா


சமமாகப் பார்க்கும் நிலை*

நான் எல்லோரையும் சமமாகப் பார்க்கும் நிலையை வாழ்வின் துவக்கம் முதல் கடைப்பிடித்து வருகிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. யாரையும் புண்படுத்துவதும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா


என்மேல் நம்பிக்கை இருந்தால்

என்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு செய்ய முடியாத காரியம் என்று ஏதும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா.என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன்

நான் இந்த பெளதீக உடலுடன் ஷீரடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன். என் வருகைக்கு எல்லைகள் இருக்க முடியாது. நீங்கள் என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன். ஷிர்டி சாய்பாபா


உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்

நான் ஸ்தூல உடலுடன் ஷீரடியில் இல்லையென்று கருத வேண்டாம். என் மேல் நம்பிக்கை கொண்டு என்னை இதயபூர்வமாக நினைத்த  மறு நிமிடமே உன் முன்னால் இருப்பேன். எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். உங்களுக்கு தாசனாய் இருப்பேன். உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்.உங்கள் காரியங்களில் என் உதவியை கோரினால் உடனே நிறைவேற்றுகிறேன். என்னை எப்போதும் நினைப்பவர்களின் கடனை அவ்விதமாகத் தீர்த்துக்கொள்வேன். சத்குரு ஷிர்டி சாய்பாபா


எல்லா வேலைகளிலும் உதவி செய்கிறேன்

உனக்கு ஒவ்வொரு வினாடியும் என்மேல்  நம்பிக்கையுண்டாவதற்கு, நான் நீங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் உதவி செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா

Thursday, August 8, 2019

Christian Daily Prayer,

14. அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
 சங்கீதம் 91::14

Prayer:
அற்புதமான இரட்சகரே!

உம்மை நம்பியிருக்கிறவர்களை உயர்த்துகிற வல்லமை கொண்டவர் நீர். ஆண்டவரே, இன்றைக்கு என்னையும் நினைத்தருளும். உம்மையே உறுதியாய் பற்றிக்கொள்கிற கிருபையை எனக்குத் தந்தருளும். அதன்மூலம் என்னுடைய குறைவுகள் யாவும் மாறி என் வாழ்க்கை செழிப்படைய கிருபை செய்தருளும். என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்தருளும். இவ்வுலக ஆசீர்வாதங்கள் மட்டுமல்ல ஆவிக்குரிய வாழ்விலும் ஆசீர்வாதத்தை பெற்று உயர உதவிச்செய்தருளும். என்னை கைவிடாமல் காக்கும்படி நான் தொடர்ந்து உம்மையே பற்றிக்கொள்ள இரக்கம் பாராட்டும். உமது நன்மையும் கிருபையும் என்னை தொடரட்டும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதிப்பேன்.”
 ஆதியாகமம் 12:2

Prayer:
அன்பின் தேவனே,

என் பாரங்கள் அனைத்தையும் உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய ஆசீர்வாதங்களால் என்னை நிரப்பும். உம்முடைய வழிகளில் நான் நடக்க எனக்கு உதவும். எப்போதும் உம்மை தேடவும் உம்முடைய கற்பனைகளில் நிலைத்திருக்கும்படி எனக்கு உதவிச்செய்தருளும். உம்முடைய பிள்ளையாக உமது ஆசீர்வாதங்களை நானும் சுதந்தரிக்க எனக்கு உதவிச்செய்து என்னை உயர்த்தியருளும். உமக்குள் என் வாழ்க்கை கட்டி எழுப்பப்படட்டும். ஒவ்வொரு நடவடிக்கையிலும் நீர் என்னோடிருந்து, என்னை ஆசீர்வதித்தருளும். என்னை தாழ்த்தி உமது சமூகத்தில் அர்ப்பணிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.“என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும்,....  உன்னை நிலைநிறுத்தினேன்” (யாத்திராகமம் 9:16)

Prayer:
அன்பின் தேவனே,

நீங்கள் எனக்காக கொடுத்த வாக்குத்தத்ததிற்காய் உமக்கு நன்றி. நீர் வார்த்தையில் உண்மையுள்ளவர். உம்மிலும் உமது வார்த்தையிலும் நான் கவனம் செலுத்த உதவிச்செய்தருளும். ஏற்ற நேரத்தில் ஏற்ற வார்த்தையின் மூலமாக நீர் என்னை கனம்பண்ணுவீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.  உமது சமூகத்தில் காத்திருக்கிறேன். உமது வல்லமையையும், பலத்தையும் எனக்குத் தந்தருளும். நீர் யாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிக்கிறவர் என்பதை நான் அறிவேன். உமது வார்த்தையின்படியே ஏற்ற நேரத்தில் உமது நாம மகிமைக்காக என்னை உயர்த்தியருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.


தேவன் எல்லாவற்றையும் அறிந்தவர்!

“உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.”
 மத்தேயு 6:8

Prayer:
பரம தகப்பனே,

நான் கேட்பதற்கு முன்பே, என் தேவைகளை அறிந்து கொடுக்கிற நல்ல தகப்பன் நீர், என் தேவைகளுக்காக உம்மிடம் வருகிறேன். இந்த உலகத்தில் யாரையும்விட என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிற நீர் எனக்கு நல்ல ஈவுகளையே தருவீர். விசுவாசத்தினாலே உமது ஈவுகளை நான் பெற்றுக்கொள்கிறேன். நான் விரும்புவதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் என் தேவைகளை நீர் பூர்த்தி செய்வீர் என்று நான் விசுவாசத்துடன் அறிக்கை செய்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.


“நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை.”

 ஏசாயா 41:9

Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

நான் என் பெலவீனத்தையும் நோயையும் உமக்கு முன்பாக அர்ப்பணிக்கிறேன். நீர் தெரிந்துகொண்டவர்களை நீர் ஒருபோதும் கைவிடுகிற தேவனல்ல. உம்மைவிட்டு விலகச்செய்த என் பாவங்களை எனக்கு மன்னித்து, என் பலவீனத்திலிருந்து என்னை விடுவிக்கவும், என் நோயிலிருந்து என்னை குணமாக்கும்படியும் ஜெபிக்கிறேன். உமது அழைப்பை நான் அலட்சியம் செய்யாமல், அழைப்பிற்கு ஏற்ற பாத்திரமாய் உபயோகப்படும்படிக்கு என்னை வனைந்தருளும். இதன்மூலம் உமது நாமம் மகிமைப்படட்டும்.  உமது வார்த்தையை நான் நம்புகிறேன். நீர் என்னோடிருந்து உமது வல்லமையை வெளிப்படுத்தும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.


“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்.”

 எரேமியா 1:5


Prayer:

என்னை நேசிக்கும் அன்பு தகப்பனே,

இந்த வார்த்தையின் மூலம் நீர் இன்று என்னோடு பேசியதற்காக உமக்கு நன்றி. என் தாயின் கர்ப்பத்தில் என்னை உருவாக்கியதற்கான நோக்கத்தை நான் அறிந்து கொண்டேன். உம்முடைய பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி, உம்முடைய வார்த்தையை சுமந்து செல்லும் பாத்திரமாக என்னை உபயோகப்படுத்தும். உமது நாம மகிமைக்காக நான் நல்ல கனிகளை கொடுக்க உதவிச்செய்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.“நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்”

 சங்கீதம் 91:16

Prayer:
அன்புள்ள பரலோகத் தகப்பனே,

நீர் உன்னதமானவர். உலகத்திலுள்ள ஆபத்திலிருந்தும், சடுதியான தாக்குதல்களிலிருந்தும் நீரே உம்முடைய பிள்ளைகளை பாதுகாக்கிறீர் என்று நான் நம்புகிறேன். தெய்வீக ஆரோக்கியத்தை எனக்கு தந்து, இந்த பூமியில் நீண்ட ஆயுளை கொடுத்து என்னை காத்தருளும். உமது பாதுகாக்கும் கரத்தை விட்டு நான் ஒருபோதும் விலகிச்செல்லாதபடி நீர் என்னை பாதுகாத்துக்கொள்ளும். நீர் கொடுத்த இந்த வாழ்க்கையில் உமது நோக்கத்தையும் திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றுகிற மகனாக/மகளாக என்னை மாற்றியருளும். உம்முடைய ஆசீர்வாதத்தினால் நிரப்பும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.Monday, August 5, 2019

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.*

*ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.*

*உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.*

1)   *அர்த்த தோஷம்.*
2)   *நிமித்த தோஷம்.*
3)   *ஸ்தான தோஷம்.*
4)   *ஜாதி தோஷம்.*
5)   *சம்ஸ்கார தோஷம்.*

1 )   *#அர்த்த  தோஷம்.*

*பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா என்ன தவறு செய்து விட்டோம் இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார். பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். தன் சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது என்று கேட்டார். வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான். இது பொருளால் வரும் தோஷம் அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.*

2)  *#நிமித்த  தோஷம்.*

*அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும். அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய், எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும் அவசியம். அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை. உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது. பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன்  ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர் அம்மா நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார். அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும். தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும். நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.*

3)  *#ஸ்தான  தோஷம்.*

*அடுத்தது ஸ்தான தோஷம் எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அது மட்டுமின்றி கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன் முயன்றான். ஆனால் அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்த முற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்.*

4 )  *#ஜாதி  தோஷம்.*

*அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை. சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது. ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது. தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.*

5)  *#சம்ஸ்கார  தோஷம்.*

*அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை. ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம். அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன. தட்டுகள் உரிய முறைப்படி கழுவப்படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது. அதன் விளைவையும் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம். சாஸ்த்ராயச சுகாயச .தர்மோ ரக்ஷதி ரக்ஷித:*

Sunday, August 4, 2019

சீடர்களுக்காக ஷங்கர்

   
    சீடர்களுக்காக
    ஷங்கர்

    சிஷ்யகோடிக்களே

    நீங்களும் ஞானி தான்.

    உலக இயல்பை தெரிந்து, தெளிந்து, உணர்ந்து கொண்டால்,

   இயல்பை ஏற்றுக்கொண்டு, முரணை தவிர்த்தல், 

   மனஅமைதி கிட்டி, ஆத்ம சாந்தி கிடைக்கும்.

    புரிந்துகொள்வதற்கு:: சந்தோஷம், மகிழ்ச்சி, முயற்சி, மனித இயல்பு, ::- ஏற்றுக்கொண்டு     
    எப்பவும் கடைபிடிக்க வேண்டும்

    சோகம், துக்கம், சஞ்சலம், முரண்.:: தவிர்க்க வேண்டும்.


    ஆசை படுவது மனித இயல்பு

    தர்மத்துக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.

     நமக்கானதாக, நமக்கு தேவையானதாக இருக்கவேண்டும்

     பிறரை பார்த்து, ஒப்பீடலோ, பொறாமையாலோ, போட்டியாலோ,
     ளைந்ததாக இருக்கக்கூடாது

    ஆசை பட்டதை அடையக்கூடிய, நம்பிக்கை, விடாமுயற்சி இருக்கவேண்டும்.

    அறிவுசார்ந்த திட்டமிடுதல், செயல் இருக்க வேண்டும்.

    அதேசமயம்
   *நமக்கும்* 
   *மற்ற ஜீவன்களுக்கு, இந்த* *சமுதாயத்திற்கும்* 

   *சிந்தனை, சொல், செயலால்,* 
   *மனதாலோ, உடலாலோ* *சங்கடம், துன்பம்,* *ஏற்படக்கூடாது.* 

   நமது முயற்சியில் வெற்றி என்பது, நமது ஊழ்வினை கர்மாவை பொறுத்தது.

   புண்யகர்மா ஆதரவு, சந்தர்ப்பம் , அடையக்கூடிய நல்ல சூழல்களை கொடுக்கும்

   பாபகர்மா தடைகளையும், மனசஞ்சலத்தையும் கொடுக்கும்.

   நமது முயற்சியில், பாபகர்மாவை அழிக்க வல்ல இறை வழிபாடு கொள்ளவேண்டும்.

   இதன் மூலம் முயற்சி வெற்றி அடைய வழிகிடைக்கும்

   மிகுந்த  பாபகர்மா விரயத்தை கொடுக்கும், 

   ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் முயற்ச்சி செய்யவேண்டும்.

   கர்மா குறையும்பொழுது வெற்றி கிடைத்து, நாம் எண்ணிய ஆசையை அடைவோம்.

   இத்துடன் இந்த பிறவி முடியும்,  கர்மாவும் கழிந்திருக்கும்.

   ஒரு ஞானியாக ஜென்மம் கடைதேறும்

   சீடர்களுக்காக
   ஷங்கர்

Saturday, May 25, 2019

ஸ்ரீ ராம நாம ஜெப மஹிமை-6:: ஜடாயுவுக்கு நற்கதி கிட்டியது (ஆரண்ய காண்டம் அத்யாயம் : 19)

ஜடாயுவுக்கு நற்கதி கிட்டியது  (ஆரண்ய காண்டம் அத்யாயம் : 19)

ராவணன் ஸீதையை கடத்தி செல்லும் பொழுது வழியில் ஜடாயு என்கிற பறவைகளின் அரசன் ஸீதையை காப்பாற்றும் நோக்கில் ராவணனுடன் கடுமையான யுத்தம் புரிந்து ராவணனுக்கு பெருத்த சேதத்தை விளைவித்தது.
இறுதியில் ஜடாயு ராவணனால் கடுமையாக தாக்கப்பட்டு இரண்டு இறக்கைகளும் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்து, ராமரிடம் விபரம் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தது, ராமர் வந்தவுடன் அவரிடம் ஸீதை ராவணனால் கடத்தப்பட்டு வான்மார்க்கமாக சென்ற திசை போன்ற தகவலை சொல்லிவிட்டு உயிர்நீத்தது.
ராமர், தனது தம்பி லஷ்மணனிடம் ‘பறவைகளின் அரசனாகிய ஜடாயு எனக்காக ராவணனுடன் போரிட்டு உயிர் நீத்திருக்கிறது. மனித இனத்தில் மட்டுமல்லாமல் மற்ற ஜீவராசிகளிலும் கூட உயர்ந்த குணங்களை கொண்ட ஜீவன்கள்இருக்கின்றன என்பதை ஜடாயு நிரூபித்திருக்கிறது. ஸீதையின் பிரிவினால் இருக்கும் துன்பத்தை விட எனக்காக உயிர் நீத்த இந்த பறவையின் மறைவு எனக்கு பெரும் துயரத்தை தருகிறது. நமது தந்தை தசரத மன்னரை போலவே மதிக்க தகுந்தது ஜடாயு. 

லஷ்மணா, ஜடாயுவின் இறுதி சடங்குகளை முறையாக செய்து முடிப்போம் என்று கூறிவிட்டு ஜடாயுவை பார்த்து ‘பறவைகளின் அரசனே, நீ நல்லுலகம் செல்வாயாக யாகங்களை நடத்துபவர்கள் அடையும் நல்லுலகத்தை நீ அடைவாயாக, யுத்த களத்திலிருந்து பின் வாங்காமல் போரிட்டு, உயிர் நீக்கும் வீரர்கள் அடையும் நல்லுலகத்தை நீ அடைவாயாக” என்று ராமர் சொன்னார்.

பின்னர் ஜடாயுவின் இறுதி சடங்குகளை லஷ்மணனுடன் ஸ்ரீ ராமர் செய்து முடித்தார். ஜடாயுவுக்கு நற்கதி கிட்டியது.